Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் போராட்டத்தை இழிவு படுத்தும் தமிழக அரசு

கூடங்குளம் அணுஉலை விரைவில் இயங்க தேவையான ஒத்துழைப்பை நல்கும்படி போராட்டக்காரர்களை முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூடங்குளத்தை நோக்கி முன்னேற முயற்சி செய்ததோடு, காவல்துறையினரை கட்டைகளைக் கொண்டு தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

அணுமின் நிலையத்தை போராட்டக்காரர்கள் தாக்கினால், ஆபத்து ஏற்படும் என்பதால் காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்ததாக அவர் கூறியுள்ளார். 

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆகவே, அணுஉலை எதிர்ப்பு கொள்கையுடையவர்களின் மாய வலையில் விழ வேண்டாம் என மீனவர்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தூத்துக்குடி மணப்பாடு கிராமத்தில் காவலர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஜெயலலிதா, அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேற்படி தமிழக முதலமைச்சரின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ள கூடங்குள போராட்டக்காரர்கள் இப்படியான தகவல்களின் மூலமாக தமிழக அரசானது தமிழக மக்களை திசைதிருப்புவதோடு, பொய்யான கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவதன் மூலம் எமது போராட்டத்தை கொச்சைபடுத்த எத்தனிக்கிறது. என்று தெரிவித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post