Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று கூடும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் குழு கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. 

இக்கூட்டத்தில், மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், ராகுல் காந்திக்கு கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. பிரதமர் மன்மோகன் சிங் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை சமாளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

குஜராத் உட்பட 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், செயற்குழு கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post