Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் தமிழ் சினிமாவிற்கு இசையமைக்கும் சிவா.


"லவ் டுடே", "பூமகள் ஊர்வலம்" மற்றும் "அற்புதம்" ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிவா, இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் தமிழ் சினிமாவிற்கு இசையமைக்கவுள்ளார்.

தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வரும் இசையமைப்பாளர் சிவா, அவருடைய  மூத்த மகனின் பெயரான ஹரிஹரன் என்ற பெயரிலேயே தன்னுடைய அடுத்த கட்ட நகர்வை  தொடங்கவுள்ளார்.

"லவ் டுடே" படத்தில் இவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலசேகரன் அவர்களே மீண்டும்  இவரை  தமிழ் சினி உலகிற்கு அழைத்து வந்துள்ளார்.

 தற்போது பாலசேகரன் இயக்கும் "ஒருவர் மீது இருவர் சாய்ந்து" என்ற படத்திலேயே இசையமைப்பாளராக மீள் அவதாரம் எடுக்கவுள்ளார் இசையமைப்பாளர் சிவா.

லகுபரன் மற்றும் "ராட்டினம்" பட நாயகி சுவாதி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்காக 5 பாடல்களை இவர்  இசையமைத்துள்ளார் .விவேகா மற்றும் சிநேகனின் வரிகளில் வெளிவரவுள்ள இப்பாடல்கள் அனைத்தும்  இந்த ஆண்டிற்கான மிக சிறந்த பாடல்களாக அமைய அலை செய்திகளின் வாழ்த்துக்கள்.

[vuukle-powerbar-top]

Recent Post