Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின் தட்டுப்பாட்டை போக்க புதிய அறிவிப்புகள் ~ ஜெயலலிதா

தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், மின்சாரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதால் பொதுமக்களும் தொழில்துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சூரிய சக்தி மின்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது, விளம்பர போர்டுகளுக்கான மின்சாரத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மின்தட்டுப்பாடு தொடர்பாக நேற்று உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
[vuukle-powerbar-top]

Recent Post