Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அதிரடியாக உயர்ந்தது தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அதிர்ச்சி எல்லையைத் தாண்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று இருந்த விலையோடு ஒப்பிடும்போது ஒரு கிராம் 66 ரூபாய் விலை உயர்ந்து 3 , 022 என்ற அளவைத் தொட்டுள்ளது.

அதனால், ஒரு சவரன் விலை ஒரே நாளில் 528 ரூபாய் உயர்ந்து 24 , 176 என்ற அளவை எட்டியுள்ளது.

அதேபோல, முதலீட்டுக்கான 24 காரட் முதலீட்டுத் தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்து 3 ,232ஐ தொட்டுள்ளது. மறுபுறம், வெள்ளியும் இந்த ஓட்ப்பந்தயத்தில் பின்தங்கவில்லை.

ஒரு கிலோ பார் வெள்ளி 2 ,735 ரூபாய் விலை அதிகரித்து 64 , 505 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் 90 காசுகள் விலை உயர்ந்து 69 ரூபாயைத் தொட்டுள்ளது
[vuukle-powerbar-top]

Recent Post