Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அரசுக்கு முலாயம் சிங் யாதவ் ஆதரவு

மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்களுடன் அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.இதன் பின்னர், அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், டெல்லி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருவேளை மம்தா பாணியில் சமாஜ்வாதி கட்சியும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தால், மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும்.

இதனிடையே, இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்திலும் சமாஜ்வாதி கட்சியினர் கலந்துகொண்டுள்ளனர். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு முலாயம் சிங் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்றாவது அணி மூலம் பிரதமர் பதவிக்கு அவர் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சமாஜ்வாதி கட்சியின் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கு 22 எம்.பி.,க்கள் உள்ளனர். அதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று, முலாயம் சிங்கின் சகோதரரும் எம்.பி.,யுமான ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post