Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிழக்கில் அனைத்துக்கட்சி அரசமைப்பது குறித்து இலங்கை அரசு சம்பந்தனுடன் பேச்சு


கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் எந்தத் தரப்புக்கும் தெளிவான பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிந்து ஒரு வாரமாகியும் கிழக்கில் எந்தக் கட்சியும் ஆட்சியமைப்பதற்கான உறுதியான நகர்வை மேற்கொள்ள முடியாத தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிழக்கு மாகாணசபையில் ஆசனங்களைப் பெற்ற ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் மூலம் நல்லிணக்க முயற்சிகளை வலுப்படுத்த முடியும் என்று இலங்கை அரசில் இடம்பெற்றுள்ள இடதுசாரி அமைச்சர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், இலங்கையின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான சரத் அமுனுகம, நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சமம்பந்தனைச் சந்தித்து அனைத்துக் கட்சி அரசுக்கான சாத்தியப்பாடு குறித்து கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல் சாதகமான முறையில் இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் இதுகுறித்த எந்த உறுதியான முடிவும் எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை.
[vuukle-powerbar-top]

Recent Post