Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையில் இருந்து வருவோருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுத்தது இந்திய அரசு


இலங்கையில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்புருதீன் புதுடிடெல்லியில் தகவல் வெளியிடுகையில்,

“இலங்கை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும், யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்றும் இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தேவையற்ற பயம். இந்தியாவுக்கு வரும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

இலங்கை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அங்கிருந்து சுற்றுலா வருவோரின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இலங்கை சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, தமது வருகையை முன்கூட்டியே தெரியப்படுத்தாமல் வந்துள்ளனர்.

இவர்களுக்கு எதிராக, சில சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கலாசார மற்றும் வரலாற்று ரீதியாக இந்திய மக்களுக்கும், இலங்கை மக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உள்ளது.

இரு நாட்டு மக்களும், ஒருவருக்கு ஒருவர் சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.

இதன் அடிப்படையில், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த ஆண்டு மட்டும் இரண்டு இலட்சம் பேருக்கு சுற்றுலா வர நுழைவிசைவு வழங்கியது.

அதேபோல, இந்தியாவிலட இருந்து 1.75 லட்சம் பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்றனர்.

இந்த பிரச்சினையில், அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post