Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நான் கைதாகுவேன் உதயகுமார் உறுதி

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தொடரும் என உதயகுமார் தெரிவித்துள்ளார். 

இன்று இடிந்தகரை உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், அணுஉலைக்கு எதிரான போராட்டம் அறவழியில் தொடரும் என்று தெரிவித்தார். 

மேலும் இன்று இரவு 9 மணிக்கு கூடங்குளம் காவல்நிலையத்தில் கைதாகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் துன்பத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அணுஉலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதற்கு தமிழக காவல்துறையே காரணம் என்று உதயகுமார் தெரிவித்தார். 

இந்திய ஜனநாயகக் கட்டமைப்பு உடைந்து கொண்டிருக்கிறது என்றும் நாடு முழுவதும் அணுமின் நிலையங்கள் வந்தால் ஜனநாயகம் சீரழிந்துவிடும் என்றும் உதயகுமார் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post