Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அலரி மாளிகையில் சந்திப்பு இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்தாரா மகிந்த?


இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இன்று காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பின்போது கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்தச் சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பான முடிவு ஏதும் எடுக்கப்பட்டதா என்பது பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கிழக்கில் தேசிய அரசு ஒன்றை அமைப்பது குறித்து இலங்கை அதிபர் மகந்த ராஜபக்ச, தனது வாயால் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், அப்படி அழைத்தால், அதுபற்றி ஆலோசிக்க முடியும் என்றும் அதற்கு முன்னதாக எதையும் கூறமுடியாது என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், கிழக்கில் தேசிய அரசு அமைப்பதற்கு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்ததன் பேரில் தான் இன்றைய சந்திப்பு இடம்பெற்றதா, என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post