Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரச்சாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்தக் கூடாது : தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் பிரச்சாரத்திற்கு விலங்குகளைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்திய பிராணிகள் நல அமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடந்த 19ம் தேதி சுற்றறிக்கை ஒன்றையும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

1960ம் ஆண்டு பிராணிகள் வதை தடைச் சட்டம், 1972ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்துவது தடை செய்யப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post