Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய பிரதேச எல்லையில் மூன்றாவது நாளாக தொடரும் வைகோவின் போராட்டம்.



இலங்கை அதிபர் ராஜபக்ச வருகையை கண்டித்து மத்திய பிரதேசத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஆயிரத்து 200 கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து சாலை‌யி‌ல் அம‌ர்‌ந்து 3வது நாளாக ‌விடிய ‌விடிய போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கிறா‌ர். 

 இலங்கை அதிபர் ராஜபக்ச மத்திய பிரதேச மா‌நில‌ம், சாஞ்சியில் புத்த மத உயர்கல்வி மைய தொடக்கவிழா இ‌ன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள ராஜபக்ச இந்தியா வந்துள்ளார். அவரது வருகையை கண்டித்து கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

அத‌ன்படி இரண்டாவது நாளாக நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள், இரவில் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை ஓரத்திலேயே தொண்டர்கள் சமைத்து உண்டனர். மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்ச வர உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வைகோ அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ம.‌தி.மு.க‌.‌வி‌ன் இ‌ந்த போரா‌ட்ட‌த்த‌ி‌ற்கு அ‌‌ப்பகு‌தியை சே‌ர்‌ந்த ம‌க்க‌ள் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாக அ‌க்க‌ட்‌சியை சே‌ர்‌ந்த ம‌ல்லை ச‌த்யா கூ‌றினா‌ர்.

[vuukle-powerbar-top]

Recent Post