Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்காவில் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஸ்விட்சர்லந்தின் ரோஜர் ஃபெடரர், காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஃபெடரர், தர வரிசையில் 7-ம் இடத்தில் உள்ள செக் குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச்சுடன் மோதினார்.

இருவருக்கும் இடையே இதுவரை நடைபெற்றுள்ள 15 போட்டிகளில் 11 போட்டிகளில் ஃபெடரரே வெற்றி பெற்றுள்ளார். அதனால் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் 2 செட்டுகளை 6-7, 4-6 என்ற கணக்கில் ஃபெடரர் இழந்தார்.

3-வது செட்டில் சற்று நிதானமாக விளையாடிய ஃபெடரர் 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை தனதாக்கினார். இதனையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் 4-வது செட் ஆட்டத்தில் மீண்டும் அதிரடி காட்டினார் தாமஸ் பெர்டிச். இதில் 6-3 என்ற கணக்கில் ஃபெடரரை வீழ்த்தி, முதன்முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார் பெர்டிச். அரைறுதியில் இவர், இங்கிலந்து வீரர் ஆண்டி முர்ரே-யை எதிர்கொள்கிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post