Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்றுடன் நிறைவுக்கு வரும் மழைக்கால கூட்டத்தொடர்

ஒருநாள் கூட அலுவல்கள் நடைபெறாமலேயே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 8ம் தேதி தொடங்கியது.

செப்டம்பர் 7ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க் கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை அறிக்கை வெளியானது.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்த விடாமல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதனால் கடந்த 13 நாட்களில் ஒரு நாள் கூட அவை அலுவல்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்றுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது.

கடைசி நாளான இன்றும் அலுவல்கள் நடைபெறுவது சந்தேகம் என்பதால், இந்த கூட்டத் தொடர் முழுவதும் வீணாகியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post