Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உதயகுமாரின் வீட்டை சுற்றிவளைத்த காவல்துறை

இடிந்தகரையில் தொடர்ந்து பதற்றம் நிலவும் அதே நேரத்தில் நாகர்கோவிலில் இருக்கும் உதயகுமாரின் வீட்டினை காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

உதயகுமாரின் வீட்டில் அவரது பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அவர்களை கைது செய்யும் பட்சத்தில் உதயகுமாரை வெளியில் கொண்டுவரலாம் என்று காவல்த்துறையினர் எண்ணியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இடிந்தகைரையில் இருக்கக்கூடிய சுனாமி காலனி பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயத்தினுள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல்துறையின் இவ்வாறன நடவடிக்கையால் மக்கள் மேலும் மேலும் ஒடுக்கப்பட்டு செல்வதாக தமிழர் உணர்வு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தகவலுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்
[vuukle-powerbar-top]

Recent Post