Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போபாலில் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு

தாக்கல்விஷவாயுக்கசிவு விபத்து நிகழ்ந்த போபால் யூனியன் கார்பைடு உரத் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் இன்னமும் நீர் மாசடைந்து காணப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நச்சு ஆய்வு அமைப்பு தனது அறிக்கையை நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், 30 தண்ணீர் மாதிரிகளை சோதித்ததில், அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், நைட்ரேட், ஈயம், நிக்கல், ஆகிய கனிமங்கள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நிலத்தடி நீர் மாசுபாட்டால் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் எதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களுக்கு வேறு இடத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீ வினியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேச தலைநகர் போபாலில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிந்ததில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post