Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் கூட்டமைப்பு - இறுதி முடிவு ஹக்கீமின் கையில்


கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்தால், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சுழற்சி முறையில் முதல்வர் பதவியை வகிப்பதற்கும் அதில் முதல் அரைப் பதவிக்காலத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கவும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, கிழக்கு மகாணசபையில் யாருக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் முடிவு செய்யவில்லை.

எந்தக் கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது என்று முடிவெடுக்கும் அதிகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்ரசின் தலைவரான ரவூப் ஹக்கீமிடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாட்களாக நடந்த கட்சியின் உயர்மட்டக் குழுவின் கூட்டங்களை அடுத்தே, இந்த அதிகாரம் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் கலந்து பேசிய பின்னரே இறுதி முடிவை எடுப்பார் என்று என்று கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post