Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரசாங்கம் கவிழ்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை - ஏ.கே. அந்தோனி

இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடையவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கவிழ்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் தற்போது இல்லை எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்துள்ள நிலையில் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பெனர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்துக்கான ஆதரவை  திரும்ப  பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் நேற்று  முழுவடைப்பு போராட்டமும் நடாத்தப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post