Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை படையினருடனான கூட்டுப் பயிற்சிகளை இடைநிறுத்துகிறது இந்தியா? - பிரிஐ தகவல்


இலங்கை படையினருடனான கூட்டுப் பயிற்சிகளை இந்திய இடைநிறுத்தி வைக்கவுள்ளதாக பிரிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை படையினருக்குப் பயிற்சி அளிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இருந்தாலும், இலங்கை படையினருக்குப் பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்தும் திட்டம் ஏதும் இந்திய அரசிடம் இல்லை.

ஆனால், இலங்கை படையினருடனான கூட்டுப் பயிற்சிகள் குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை படையினருக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் தொடர்ந்து இடம்பெறும்.

இலங்கை இராணுவ ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் இந்தப் பயிற்சிகளை நிறுத்தும் திட்டம் ஏதும் இல்லை.

பெங்களூர், கன்னூர், பெல்காம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பாதுகாப்பு பயிற்சி நிலையங்களிலும் 450 இலங்கை படையினர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

எவ்வாறாயிளும், இருநாட்டு படைகளுக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சிகளை குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் பிரிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post