Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

என்னை எவராலும் பதவியில் இருந்து வெளியேற்ற முடியாத- ராஜபக்ச

தன்னை எவராலும் பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
நேற்று அலரி மாளிகையில், ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் நடத்திய காலையுணவு சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் என்னை வெறுத்து நிராகரித்தால், நான் வீட்டுக்குச் செல்லத் தயாராகவே உள்ளேன்.

ஆனால் என்னை நிர்ப்பந்தித்து எவராலும் பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது.

ஒரு அரசியல்வாதியாக எனக்கு 42 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

எந்தவொருவரையும் விளங்கிக் கொள்வதற்கான சிறப்பு சக்தி என்னிடம் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால், எமது அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியும்.

சிகையலங்கார நிலையக் கதவு போன்று இலங்கை அரசாங்கம் தனது கதவுகளை இரண்டு பக்கமும் திறந்தே வைத்துள்ளது.

எவரேனும் சுதந்திரமாக உள்ளேயும் வரலாம், வெளியேயும் போகலாம்.

ஒவ்வொரு கட்சியிலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் இருக்கிறார்கள்.

எனது அமைச்சரவையில் கூட கடும்போக்காளர்கள் இருக்கின்றனர்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற இனவாதத்தை ஆளும்கட்சி பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை.

நாம் முஸ்லிம்களையும் தமிழர்களையும் எமது வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருந்தோம். எமது 14 உறுப்பினர்களில் 7 பேர் முஸ்லிம்கள்.

அப்படியிருக்கும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எப்படி இனவாதக் கட்சி என்று கூற முடியும்?

விருப்புவாக்கு முறையை அரசாங்கம் விரைவில் ஒழிக்கவுள்ளது.

இதன் முதற்கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்து விருப்புவாக்கு முறையை ஒழிக்கவுள்ளோம்.

விரைவில் இதற்கான திருத்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஏனைய மாகாணசபைகளுக்கு உடனடியாக, தேர்தல் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை.

எதிர்க்கட்சி விரும்பினால் இன்னொரு தேர்தலுக்கு நாம் தயார்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post