Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை விவகாரத்தில் தலையிடக் கோரி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலாரிக்கு கடிதம்

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பொறுப்புக்கூறுதல், உறுதியான அமைதியை மீளக்கொண்டு வருதல் குறித்து இலங்கை  அரசுடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனிடம் 31 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

மத்திய கிழக்கு, தெற்காசிய விவகார உபகுழுவைச் சேர்ந்த பில் ஜோன்சன், வில்லியம் கீற்றிங், மைக்கல் கிரிம், வோல்டர் ஜோன்ஸ், ஸ்டீவ் சபொற், ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை  அரசுக்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆனால் இந்த அறிக்கையில், அனைத்துல சட்டங்கள் மோசமாக மீறப்பட்டது தொடர்பாக பதிலளிக்கப்படவில்லை.

நல்லிணக்கம் பொறுப்புக் கூறுதல் ஆகியவற்றுக்கான ஆரம்ப நகர்வுகளை இலங்கை  அரசு மேற்கொண்டுள்ள போதும், அர்த்தமுள்ள, காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கிறது.

போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறுதல் ஆகிய விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் வெறும் வாக்குறுதியுடன் நின்று போனால், அது இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை முன்நோக்கி நகர்த்தத் தவறிவிடும்.

பொறுப்புக்கூறுதல், மற்றும் நல்லிணக்க முயற்சிகள் விடயத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இராஜதந்திர வழிமுறைகளின் மூலம் காத்திரமானதும் அர்த்தமுள்ளதுமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post