Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எளிமையாக்கப்பட்ட விசா நடைமுறை : அமெரிக்க தூதரகத்தில் அமலுக்கு வந்தது

அமெரிக்க விசா பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை, சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் விசா பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது.

விசா பெறுபவர், ஒரு முறை தூதரகத்திற்கு வந்து, கைவிரல் ரேகை பதிவு செய்தல், புகைப்படம் எடுத்தல், ஆவணங்கள் சரிபார்ப்பு, நேர்முக விசாரணை ஆகிய நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பவர்.

ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தூதரகத்துக்கு வருவதால், இந்த நடைமுறைகளுக்கு அதிக நேரம் பிடித்தது. இதையடுத்து, சென்னை செனடாப் சாலையில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டு, அங்கு ஆவணங்கள் சரிபார்ப்பு, விரல் ரேகை பதிவு போன்றவற்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வுக்கு மட்டும் தூதரகத்துக்கு வந்தால் போதும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்-லைன் மூலம் பதிவு செய்து, நேரம் ஒதுக்கீடு பெறும் முறை இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுதவிர, தமிழ் உள்பட ஆறு மொழிகளில் கால்சென்டர் மூலம் உதவும் முறையும் துவக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது, அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு கால் சென்டரை தொடர்பு கொண்டு தமிழிலேயே உதவிகள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனித்தனியாக இருந்த சர்வர் இணைப்பு முறை மாற்றப்பட்டு, உலகம் முழுவதும் centralized server முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்காலிக விசா வழங்குவதில் உலகிலேயே சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் தான் முன்னணியில் உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இங்கு ஏழு லட்சம் தற்காலிக விசாக்கள் வழங்கப்பட்டன. அமெரிக்க விசா பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை, சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் விசா பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. விசா பெறுபவர், ஒரு முறை தூதரகத்திற்கு வந்து, கைவிரல் ரேகை பதிவு செய்தல், புகைப்படம் எடுத்தல், ஆவணங்கள் சரிபார்ப்பு, நேர்முக விசாரணை ஆகிய நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பவர். ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தூதரகத்துக்கு வருவதால், இந்த நடைமுறைகளுக்கு அதிக நேரம் பிடித்தது.

இதையடுத்து, சென்னை செனடாப் சாலையில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டு, அங்கு ஆவணங்கள் சரிபார்ப்பு, விரல் ரேகை பதிவு போன்றவற்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கு மட்டும் தூதரகத்துக்கு வந்தால் போதும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆன்-லைன் மூலம் பதிவு செய்து, நேரம் ஒதுக்கீடு பெறும் முறை இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதவிர, தமிழ் உள்பட ஆறு மொழிகளில் கால்சென்டர் மூலம் உதவும் முறையும் துவக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது, அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு கால் சென்டரை தொடர்பு கொண்டு தமிழிலேயே உதவிகள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனித்தனியாக இருந்த சர்வர் இணைப்பு முறை மாற்றப்பட்டு, உலகம் முழுவதும் centralized server முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்காலிக விசா வழங்குவதில் உலகிலேயே சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் தான் முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இங்கு ஏழு லட்சம் தற்காலிக விசாக்கள் வழங்கப்பட்டன.
[vuukle-powerbar-top]

Recent Post