Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ~ ஏ.கே. அந்தோணி

அண்டை நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க எதிர்ப்புத் தெரிவித்து முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து, திமுக உறுப்பினர் கனிமொழி மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த ஏ.கே. அந்தோணி இதனைக் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது எனவும் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், பெங்களூரு, கண்ணூர், பெல்காம் ஆகிய இடங்களில் 450 இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post