Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நவி பிள்ளை

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை தலைமையிலான தொழில்நுட்ப நிபுணர் குழு வரும் 14-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

இத்தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை இந்த குழு பார்வையிட உள்ளது. மேலும், அங்கு நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக இலங்கை அரசுக்கு அந்த குழு ஆலோசனை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர், நவி பிள்ளை தலைமையிலான குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
[vuukle-powerbar-top]

Recent Post