Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சூர்யாவிற்காக குரல் கொடுத்த கார்த்தி.


நடிகர் கார்த்தி தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து ஒரு ஆசை அவருக்கு இருந்ததுண்டு.  சூர்யாவுடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடித்து விட வேண்டும் என்பதே அது.

பல காலம் காத்திருந்த அவருக்கு தற்போது ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.அண்மையில் சூர்யா நடித்து தற்போது வெளிவர காத்திருக்கும் படமான "மாற்றான்" தமிழிலும், தெலுகுவிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இரட்டை சகோதரர்களாக நடித்துள்ள சூர்யாவின் கதாபாத்திரத்தின் இரட்டை சகோதரர்களில் ஒருவருக்கு தெலுகு மொழியாக்கப்படத்திற்காக,குரல் கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி.இதன் மூலமாக சூர்யாவின் படத்தில் ஒரு பாகமாக இருக்க வேண்டும் என நினைத்த கார்த்தியின் கனவு நனவாகியுள்ளது.

ஏற்கனவே தெலுகு மொழியில் சிறிது பரிச்சயமான கார்த்திக்கு இந்த வாய்ப்பு பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.தமிழில் கார்த்தி நடித்த படங்கள் தெலுகுவில் வெளியாகி வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

[vuukle-powerbar-top]

Recent Post