Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை மக்களை பீதியடைய செய்த பேய் மழை (படங்கள்)



இன்று சென்னையில் திடீரென கருமேக சூழ்ந்து சூறாவளி காற்றுப்போல் வீசி மக்களை பீதியடைய செய்திருக்கிறது.

இந்த பயங்கர சூறாவளிக் காற்றில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை திடீரென என்று கருமேகம் கூடியதால் தலைநகரமே இருண்டது. 

சற்று நேரத்தில் சூறாவளிக் காற்று வீசவே சாலையோரங்களி்ல் இருக்கும் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. மற்றும் கடைகளின் பெயர் பலகைகளும் சுருண்டு விழுந்தன. தூசி மண்டலத்துடன் மிக பலத்த காற்று வீசியதால் இரு சக்கர ஓட்டிகள் பெரும் திணறலுக்கு உள்ளாயினர். 

இந் நிலையில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யவே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில்தான் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரின் பல்வேறு பகுதிகளி்ல் மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல புறநகர் தொடருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையிலிருந்து வெளியூர் கிளம்பும் பல தொடருந்துகளும் தாமதமாகியுள்ளன. இந்த மழையின் வரவு குறித்து எந்தத் தகவலையும் முன்பே தெரிவித்தாக வானிலை மையம், இந்த திடீர் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. பெரும் மிரட்டலாக வந்த இந்த திடீர் சூறாவளிக் காற்று மற்றும் மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post