Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த திருமாவளவன் வலியுறுத்தல்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினரோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நேற்று அவர் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று எண்ணாமல் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், அணுஉலையின் பாதுகாப்பு குறித்து நல்ல முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அக்டோபர் 8 ஆம் தேதி, கடல் வழியாகச் சென்று அணுஉலையை முற்றுகையிட திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post