Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களில் உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகள் அமைக்க அரசு நடவடிக்கை


இலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களில் உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமெரிக்கா 1592 டொலர்களை வழங்கவுள்ளதாகவும் விடுதிகளை நிர்மாணிப்பது தொடர்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த 217 முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், இவர்களில் 129 பேருக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதேவேளை 2765 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 302 அறைகளை உள்ளடக்கும் முன்று நட்சத்திரதரத்திலான ஏழு முன்னணி விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அடுத்த ஆண்டில் உல்லாசப் பயணத்துறை மூலம் 1300 அமெரிக்க டொலர்களை உல்லாசப் பயணிகளிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் விகாரைகளையும், அத்துமீறிய சிங்களப் பெரும்பான்மையினரையும் தமிழர்களின் பூர்விக நிலங்களில் குடியேற்றிவரும் அதேசமயத்தில், படை முகாங்களை அமைப்பதற்கும் பாரியளவிலாள நிரப்புக்கள் அபகரிக்கப்படும் நிலையில, சுற்றுலாத்துறை என்ற போர்வையில் எஞ்சியுள்ள காணிகளையும் அபகரிக்க கொழும்பு அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை நன்கு புலனாகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post