Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மம்தா பானர்ஜி கொடுத்த கேடு முடிந்தது

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்றும் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகுமா? அல்லது நீடிக்குமா? என்பது பற்றிய இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூட்டணியில் இருந்து மமதா விலகுவது பற்றிக் கவலையில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

மம்தா பானர்ஜி முடிவு என்ன? டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியதால் நாடு முழுவதும் எழுந்துள்ள கண்டனங்கள், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் என மத்திய அரசு இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், இந்த 2 விவகாரங்களிலும் மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப் பெறவில்லை என்றால், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என எச்சரித்திருந்தார். மமதா பானர்ஜி விதித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்ன முடிவை எடுக்கும் என்பது பற்றி எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே, மமதா பானர்ஜி நாடகமாடுவதாக இடதுசாரிக் கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன.

மம்தா பற்றி காங்கிரஸ் கருத்து : இதனிடையே, மமதா பானர்ஜியின் 72 மணி நேரக் கெடு பற்றிப் பேசிய மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா, திரிணாமுல் காங்கிரஸ் விலகுவதால், மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது எனக் கூறினார். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒருவேளை அந்த கட்சி கூட்டணியில் இருந்து விலகினால், காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பில்லை என்றார். இதே கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவரான ரஷித் ஆல்வியும் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு நெருக்கடியா? அதேநேரத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு 2014ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுத் செயலாளர் பிரகாஷ் காரத் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post