Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலை போராட்டத்துக்கு ஆதரவாக கன்னியாகுமரி மீனவர்கள் வேலை நிறுத்தம்


கூடன்குளத்தில் நடைப்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதராவாக கன்னியாகுமரி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கூடன்குளத்தில் அணு உலைக்கு எதிராக நடைபெற்று வந்த அறவழிப்போராட்டம் காவல்துறையினரால் வன்முறைப் போராட்டமாக மாறியது.இதன் விளைவால் நடந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.மேலும் தூத்துக்குடியில் அந்தோணி என்ற மீனவர் சுட்டுக்கொள்ளப்பட்டார்.இதனைக் கண்டிக்கும் வகையில் காவல்துறையின் இந்த அடக்குமுறையை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்க்கு முன்னர் இராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இது குறித்து கடல் மீன்பிடிப்பு அமைப்பின் தலைவர் மீன்பிடிப்பு பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளை திரும்பப் பெற வேண்டும் இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் காடலோர மாவட்டங்களை சேர்ந்த பல மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post