Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியில் வெளியாகும் "நான் ஈ" அங்கேயும் சாதனை புரியுமா?


இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "நான் ஈ" திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதுவரை சுமார் 130 கோடிகளை வசூல் செய்துள்ள இப்படம், தெலுகுவிலும் மிக பெரியளவில் வெற்றிபெற்றுள்ளது.

"நான் ஈ" திரைப்படத்தில் கிச்சா சுதீப்,நானி மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.தொழில் நுட்பத்தில் பல புதுமைகள் கண்ட இப்படத்தை அண்மையில் கண்டு களித்த நடிகர் ரஜினிகாந்த்," நான் ஈ" படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுகுவில் கண்ட வெற்றியை அடுத்து வரும் அக்டோபர் 12 ஆம் தேதி இந்தியில் "மக்கி"என்ற பெயரில்  வெளியாகவுள்ளது "நான் ஈ" திரைப்படம்.இந்தியில் வெளியாகும் இப்படம் அங்கேயும் வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



[vuukle-powerbar-top]

Recent Post