Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வாக்களிப்பு முடிவடைந்தது – மட்டக்களப்பிலேயே அதிகபட்ச வாக்களிப்பு

இலங்கையில் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான வாக்களிப்பு இன்று பிற்பகல் 4 மணியுடன் முடிவடைந்தது.

இன்றைய தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஒரளவுக்கு சுறுசுறுப்பான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி வரையிலான வாக்களிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை இலங்கை தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 52.59 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 49.5 வீதமும், அம்பாறை மாவட்டத்தில் 52.5 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் 46 வீதமும், கேகாலையில் 43 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வடமத்திய மாகாணசபையில் அனுராதபுர மாவட்டத்தில் 49 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் மாலை 6 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகவுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post