Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சர்தாரியுடன் கிருஷ்ணா பேச்சு ~ விசா ஒப்பந்தம் இன்று கையெழுத்து

இந்தியா -பாகிஸ்தான் இடையே விசா வழங்குவதற்கான நடைமுறைகளை தளர்த்த வழி வகை செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரியை இஸ்லாமாபாத்தில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகள் இடையிலான அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

தீவிரவாதம் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப்பை எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து இரு தரப்பு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கவுரை, கிருஷ்ணா இன்று சந்திக்கிறார். அப்போது, பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வது குறித்து ரப்பானியிடம் கிருஷ்ணா பேசுவார் என தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post