Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாட்டுக்கு கடல் வழி வந்த வன்னி இளைஞன் கைது


தாயகத்தில் நாடக்கும் கொடுமைகளுக்கு ஈடு கொடுக்க முடியாது மக்கள் அனைவரும் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்கின்றனர் அந்த வகையில் அண்மையில் தமிழ் நாட்டுக்கு கடல் வழி வந்து இறங்கிய இளைஞன் ஒருவரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது  


சமீபத்தில் வன்னியில் இருந்து படகு ஒன்றின் மூலம், தமிழ்நாடு சென்று பின்னர் அங்கே கைதான புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தமக்கு வாக்குமூலத்தை தந்துள்ளதாக கியூப் பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர். கடுமையான கண்காணிப்பில் உள்ள வன்னிப் பிரதேச கடற்கரையில், இருந்து இவர் எவ்வாறு தப்பித்து இந்தியா வந்தார் என்று தமிழகப் பொலிசார் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தனர் என்று சொல்லப்படுகிறது. இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படையினர் குறிப்பிட்ட பகுதியை 24 மணி நேரமும் தனது கண்காணிப்பில் வைத்திருப்பதால் அப்பகுதியில் இருந்து இந்தியாவுக்குச் செல்வது என்பது முடியாத காரியம். இதனைத் தவிர, இந்திய கடற்படையினரும் தற்போது ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு இந் நபர் எவ்வாறு இந்தியாவுக்குள் பிரவேசித்தார் என்பது பெரும் கேள்விக்கிறியாக இருந்தது. இன்றைய தினம் குறிப்பிட்ட நபர் பொலிசாருக்கு தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார் என்றும், அதில் அவர் தாம் பயணித்தவிதம் தொடர்பாக தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந் நபரின் பெயரை வெளியிட தமிழகப் பொலிசார் மறுத்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
[vuukle-powerbar-top]

Recent Post