Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈரோடு அருகே தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பிரசவத்தின் போது மருத்துவர்கள் தவறாக சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வெட்டையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கீத்குமார். இவரது மனைவி ஊர்மிளாவை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமானையில் சேர்த்தனர். 

பிரசவ வலி அதிகமானதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், அறுவை சிகிச்சை செய்யவும் கால தாமதம் ஆனதாக தெரிகிறது. 

அறுவை சிகிச்சையின் போது தொப்புள் கொடி கழுத்தில் சிக்கியதால் பிறக்கும் போதே குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post