Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாளை மறுநாள் கூடங்குளத்தில் முற்றுகைப் போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பப் படுவதைக் கண்டித்து, நாளை மறுநாள் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அணு உலை எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இடிந்தகரையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, போராட்டக் குழுத் தலைவர் சுப. உதயகுமார் தெரிவித்தார்.

உள்ளூர் மக்களின் ஆதரவின்றி, அணு மின் நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அணு உலையை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடிந்தகரையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், அந்த கிராமத்திற்கு வெளியே முதன் முறையாக தற்போது முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் உதயகுமார் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post