Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சர்ச்சைக்குரிய புதிய அமெரிக்கத் தூதுவருடன் பீரிஸ் இன்று முதல் சந்திப்பு


இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் ஜே சிசன் கொழும்பில் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சரை முதல் முறையாகச் சந்தித்துப் பேசவுள்ளார்.

புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்ட மைக்கல் ஜே சிசன் தனது பதவி உறுதிப்படுத்தபட்டதும் அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த கருத்து
இலங்கை அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையின் மனிதஉரிமைகள் நிலையில் முக்கிய கவனமெடுக்கப் போவதாகவும், ஊடகப் பணியாளர்கள், மனிதஉரிமையாளர்களின் பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அவர் தனது பணியை பொறுப்பேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்தார்.

இன்று முதல்முறையாக அவர்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்துப் பேசவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் இருதரப்பு வர்த்தக விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, வரும் 13ம் நாள் இலங்கையின் வரவுள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கையும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வரும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post