"ஈரம்" பட இயக்குனர் அறிவழகன் இயக்கும் "வல்லினம்" என்னும் புதிய படத்தில்,நகுல் நடித்துக்கொண்டுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
அண்மையில் இப்படத்தின் ஒரு பாடலை ஆன்ட்ரியாவுடன் சேர்ந்து பாடியுள்ளார் நடிகர் சிம்பு."வல்லினம்" படத்திற்கான பாடல்கள் இசையமைக்கும் பணிகள் யாவும் முடிவடைந்து, தற்போது மிக விரைவில் பாடல்கள் அனைத்தும் வெளியிட தயாராகி வருகின்றன.
"வல்லினம்" படத்தில் கூடைப்பந்தாட்ட வீரராக நடித்துள்ளார் நகுல்.இந்தி சினி உலகின் முன்னணி நடிகர் அதுல் குல்கர்னி நகுலின் கூடைப்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் நகுல் ஜோடியாக மிருதுளா நடித்துக்கொண்டுள்ளார்.இயக்குனர் வாசு மகன் ஷக்தி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.