Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நீருக்காக விவசாயிகள் தொடருந்து மறியல் போராட்டம் நடத்த அறிவிப்பு

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தொடருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். 

அப்போது, காவிரியில் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அக்டோபர் 30ம் தேதி வரை நாளொன்றுக்கு 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடக் கோரி, வரும் 4ம் தேதி தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post