Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டீசல், சமையல் சிலிண்டர் விலை உயருமா?

டீசல், மண்ணெண்ணெய், சமையல் சிலிண்டர் விலையை அதிகரிப்பது பற்றி இன்று அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டீசல், மண்ணெண்ணெய், சமையல் சிலிண்டர் விலை உயர்வு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் சிலிண்டர் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் விலை உயர்த்தப்பட்டது. 

இந்த பொருட்களின் உற்பத்தி செலவு 28 சதவிகிதம் அதிகரித்த போதும் விலை உயர்த்தப்படவில்லை. எனவே, இவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. 

ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 19 ரூபாய் 26 காசுகளும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில் 34 ரூபாய் 34 காசுகளும், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சமையல் சிலிண்டர் விற்பனையில் 347 ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன. 

மேலும், சமையல் சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை குறைக்கும் வகையில், குடும்பத்திற்கு ஆண்டுக்கு 4 முதல் 6 சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும், மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கும் குடும்பத்திற்கு மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் பெட்ரோலிய அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

இந்த பரிந்துரையின் மீதும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தொடர் இழப்பை தடுக்கும் வகையில் பெட்ரோல் விலையை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post