Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உதயகுமார் இன்று கைதாக முடிவு ~ மக்களின் தீர்ப்பு என்ன?

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்று தொடரும் பதற்றம் இன்னும் சீராகவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அந்தவகையில் உதயகுமார் அவர்கள் பொதுமக்களிடம் சிறு கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அது என்னவெனில் "மீண்டும் மீண்டும் பிரச்சனையினை பெரிதாக்காமல் நான் கைதாகினால் எல்லா எம் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும் அதனால் நான் கைதாகிறேன்" என்று கூறியிருக்கிறார். 

ஆனால் இந்த கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளத மக்கள் இன்று காலையில் கூடி மக்களே முடிவேடுக்கப்போகிறார்கள். உதயகுமாரை அரசு முன் கைதாவதா! இல்லையா ! என்று.

இவ்வாறான ஓர் இக்கட்டான சூழ்நிலை அங்கு பரபரப்பாக காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் தகவலுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்
[vuukle-powerbar-top]

Recent Post