Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழினத்திற்காக உயிர் நீத்த விஜயராஜை மருத்துவமனையில் சந்தித்த சீமான் (படங்கள்)


தமிழினத்திற்காக உயிர் நீத்த  ஈகைச் சுடர் விஜயராஜை  சீமான் சந்தித்துள்ளார்  

ராஜபக்சேவின்  இந்திய வருகையை கண்டித்து தன்னை தானே தீயிட்டு  கொளுத்தி உயிர் நீத்த தமிழ் தேசிய போராளி விஜயராஜை மருத்துவ மனையில் சீமான் சந்தித்துள்ளார். விஜயராஜ் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்  இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின் போது  சீமான் விஜயராஜின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.   சீமான், பெ.மணியரசன் அய்யா, விடுதலை சிறுத்தைகள் , தமிழ் உணர்வாளர்கள் ஏராளமானோர்  விஜயராஜை சந்தித்து உள்ளனர். வைகோ அவர்கள் ராஜபக்சேவின் வருகையை கண்டிக்க  சாஞ்சிக்கு  சென்றுள்ள படியால் அவரால் விஜயாராஜை சந்திக்க முடியாமல் போனது. 

தற்போது விஜயராஜ் இறந்துள்ள நிலையில், தமிழர்கள் உலகெங்கும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் . முத்துகுமார், செங்கொடி வரிசையில் இப்போது விஜயராஜ் அவர்களும் இப்போது தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.  













[vuukle-powerbar-top]

Recent Post