Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய ஏவுகணைகள் இலங்கைக்கு குறிவைக்கவில்லை.

இலங்கையின் கேந்திர நிலைகளை இந்திய ஏவுகணைகள் குறிவைத்துள்ளதாக வெளியான தகவல்களை, நீண்டநாட்கள் கழித்து இந்தியா நிராகரித்துள்ளது. 

இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

“இந்தியா நீண்டகால உள்நாட்டு ஏவுகணை அபிவிருத்தித் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், தற்காப்பு நோக்கத்தைக் கொண்டதேயன்றி, எந்தவொரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. 

இந்திய ஏவுகணைகள் இலங்கையின் கேந்திர நிலைகளை குறிவைத்துள்ளதாக சில இணையங்களிலும், அச்சு ஊடகங்களிலும் செய்திகளை வெளியானதை அவதானிக்க முடிந்தது. 

இந்த செய்தி முற்றிலும் அடிப்படையற்றது. திரித்துக் கூறப்பட்டது. 

முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் வெளியிடப்பட்டதாக ஊகிக்கப்படும் இந்தச் செய்திகளால், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை இந்தியாவும்,கொண்டுள்ள நெருக்கமான உறவுகளைப் பாதிக்கப்படாது“ என்று கூறப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post