Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மக்கள் பாதுகாப்பு அவசியம் ஆனால் அணுஉலையில் எரிபொருள் நிரப்பத் தடை இல்லை - உச்ச நீதிமன்றம்


கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வருகிற வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக கூடங்குளம் அணுமின்நிலையத்தில் யுரேனியம் எரிபொரும் நிரப்ப ‌முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீ்திமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்ததோடு,அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்கலாம் என்றும் கூறி,அணு உலைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தி்ருந்தது. 

இந்நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 'பூவூலகில் நண்பர்கள்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் என்பவர் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூடங்குளம் அணுஉலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இம்மனுவை இன்று உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜராகி வாதாடிய அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த பிரசாந்த் பூஷன்,உலகம் முழுவதும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அணு உலை காரணமாக ஏற்பட்ட விபத்துக்களை பட்டியலிட்டதோடு, சமீபத்திய புகுஷிமா விபத்தையும், இதனால் மக்கள் வெளியேறியதையும் சுட்டிக்காட்டினார். மேலும் கூடங்குளத்தில் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் தனது வாதத்தில் கூறினார். 

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர்,"இந்த திட்டம் ரூ. 14 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.இதன் பாதுகாப்பு பிரச்னையில் மாநில அரசு, மத்திய அரசு கமிட்டிகள் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.தமிழக அரசு முதலில் எதிராக இருந்து பின்னர் முழு அளவில் ஏற்றுக்கொண்டது.இந்த திட்டத்திற்கு இதுவரை எந்த இடத்திலும் தடை பெறப்படவில்லை. எனவே இந்த திட்டத்தை நிறுத்தும் பணிக்கு தடை விதித்தால் அரசுக்கு பெரும் நஷ்டம் வரும்.மின்சார பிரச்னையை சமாளிக்க முடியாது.எனவே தடை விதிக்க கூடாது" என வாதிட்டார். 

இருதரப்பு வாதத்தை தொடர்ந்து, கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப்பும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள்,அதே சமயம் பொதுமக்களின் நலனும்,உயிரும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டனர். மேலும் இது ‌தொடர்பான அனைத்து ஆவணங்களையும், ஆய்வு அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதோடு,இவ்வழக்கை வருகிற 20 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

[vuukle-powerbar-top]

Recent Post