Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடர்ந்து முதலிடத்தில் பில் கேட்ஸ்

செல்வந்த அமெரிக்கர்களின் நிகரப் மதிப்பு கடந்த ஆண்டு 13 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக போப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் இந்த பெறுமதி 1.7 ரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளதாக போப்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

400 செல்வந்த அமெரிக்கர்களின் சராசரி நிரகப் பெறுமதி 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் போப்ஸ் சஞ்சிகையின் வருடாந்த தரப்படுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிகரப் மதிப்புடன் 19வது ஆண்டாகவும் மைக்ரோ சொப்ட் கூட்டுத்தாபன தலைவர் பில் கேட்ஸ் முதலிடத்திலுள்ளார். செல்வந்தர்களுக்கான போப்ஸ் சஞ்சிகையின் நிரல்படுத்தலில் முதல் ஐந்து இடங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post