Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சே இந்தியா வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் ~ கருணாநிதி

இலங்கை அதிபர் இந்தியா வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், அவரது வருகையை தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இலங்கையின் கொடிய அராஜகத்தை பற்றி இந்தியா சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராஜபக்சேவுக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், இனியாவது மத்திய அரசு அவரது வருகை குறித்து அக்கறையோடு சிந்திக்க வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் இந்த மாதம் கூடவுள்ளதாகவும், அப்போது டெசோ மாநாட்டின் தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வைகோ கண்டனம் : இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிற 21ம்தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு வருகிறார். அங்கு நடைபெறும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். 

ராஜபக்சே இந்தியா வருகைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சாஞ்சி நகரில் ராஜபக்சேவுக்கு எதிராக வைகோ தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே ம.தி. மு.க. அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post