Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அந்நிய முதலீட்டை எதிர்காலத்தில் ரத்து செய்வது கடினம் ~ மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்காலத்தில் ரத்து செய்வது கடினம் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

டெல்லியில் பேசிய அவர், நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் இருக்கும் போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துணிச்சலான முடிவை மேற்கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். 

இது தொடர்பான, கொள்கை முடிவில் இருந்து எந்தவொரு சூழலிலும் அரசு பின் வாங்காது என்று கூறிய ஆனந்த் சர்மா, தற்போது சில்லறை வணிகத்தில் நுழையும் அந்நிய நிறுவனங்களின் உரிமங்களை எதிர்காலத்தில் ரத்து செய்ய முயன்றால் ஏராளமான சட்டச்சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று கூறினார். 

நாட்டின் பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாக ஆனந்த் சர்மா குற்றம்சாட்டினார்.
[vuukle-powerbar-top]

Recent Post