Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வணிகர்கள் கவலை. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. நடுவண் அரசு அனுமதி


இதுவரை  நிலுவையில் இருந்த சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு  இப்போது அனுமதி வழங்கி உள்ளது மத்திய அரசு. இதனால் சில்லறை வணிகர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

 கூட்டணிக் கட்சிகள், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியது. 

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் வணிகர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இத் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. ஒற்றை பிராண்டை விற்கும் நிறுவனங்களில் மட்டும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டது. இந் நிலையில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சரான பிறகு இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுங்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, சமையல் கேஸுக்கான மானியக் கட்டுப்பாடு ஆகியவற்றை நேற்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இன்று அடுத்த அதிரடி அறிவிப்பைச் செய்துள்ளது மத்திய அரசு. 

 மத்திய அரசின் இந்த முடிவில் மூலம் இந்தியாவில் வால்மார்ட், டெஸ்கோ, மோர்ரிசன்ஸ்,  மெட்ரோ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடைகளைத் திறந்து சில்லறை வியாபாரத்தில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை நம் ஊர் கடைகளை விட மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் சக்தி படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மெட்ரோ நிறுவனம் தனது ஸ்டோர்களை இந்தியாவில் நடத்தி வந்தாலும் சில்லறை வணிகம் செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வணிகர்களுக்கு மட்டுமே (வர்த்தக வரி செலுத்துவோர்) பொருட்களை விற்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

இப்போதைய மத்திய அரசின் முடிவின் மூலம் மெட்ரோ அங்காடிகளில்  பொது மக்களும் கூட பொருட்களை வாங்க முடியும். விமானத்துறையிலும் அன்னிய முதலீட்டு அனுமதி: அதே போல இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் மத்திய அமைச்சரவை இன்று அனுமதி அளித்தது. இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியும். 
[vuukle-powerbar-top]

Recent Post