Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் கனமழை ~ வாகன நெருசலில் தவிக்கும் மக்கள் (படங்கள்)

நேற்று இரவில் இருந்து சென்னையில் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் சந்தோசமாக இருந்தாலும் மறுபுறம் வேதனையும் கஷ்டத்தையும் அனுபவிக்கின்றனர்.

சென்னையில் வடிகால் அமைப்புகள் சரிவர மேம்படுத்தப்படாமல் இருப்பதால் மழை நீர் கால்வாய் வழியாக கடலுக்கு செல்வது தடைப்பட்டு வீதிகளில் நீர் தேங்கி நிக்கிறது. இதனால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் வாகன ஓட்டிகள். 

அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு இன்று காலையில் இருந்து வாகன நெரிசல் அதிகமாகவே இருக்கிறது காரணம் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் மேற்கொள்ளவில்லை.

இதனால் நடைபாதையில் செல்லும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் வாகனங்கள் எறும்பு ஊர்வது போல் ஊர்ந்து ஊர்ந்து செல்கிறது. 

இதனால் கோயம்பேடு புறநகர் நிலையத்துக்கு செல்லும் பயணிகளும் தங்களின் பயண நேரத்துக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். 

தமிழக அரசே இதற்கு தற்காலிக தீர்வு எடுக்காமல் நிரந்தர தீர்வு எடுக்குமாறு அலை செய்திகள் கேட்டுக்கொள்கிறது.





[vuukle-powerbar-top]

Recent Post