Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் சிவகாசி, விருதுநகர் பட்டாசு ஆலைகளில் சோதனை

சிவகாசி அருகே முதலிபட்டியில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து அங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் 11 பேர் கொண்ட குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. நேற்று வரை சுமார் 310 தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அவற்றில், 45 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு, வெடி மருந்து உபயோகிப்பது, சேமித்து வைப்பது, கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர். 

இந்நிலையில், வெடி பொருட்கள் அதிகமாக இருந்தாலோ அல்லது, வைக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் வைத்தாலோ உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆய்வுக் குழு அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post